புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2015

மைத்திரியோடு புதிய பிரதமராக ரணிலும் இன்று பதவியேற்பு


பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும்.
இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதியின் சத்தியப்பிரமாண நிகழ்வு, கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

ad

ad