1 ஜன., 2015

கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பியபோது விபத்து: 6 கல்லூரி மாணவர்கள் பலி

கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் 6 பேர்
பலியாகினர்.

அம்மாநிலத்தின் கொல்லம் மாவட்டத்திற்குட்பட்ட வர்கலா கடற்கரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு ஆறு மாணவர்களும் காரில் வந்துகொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி மீது அதிவேகத்தில் வந்த மாணவர்களின் கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அனைவரும் பலியானதாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் கூறினார்.

அவர்களது உடல்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டன. அவர்கள் அனைவரும் டி.கே.எம். கொல்லம் என்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.