புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனம்மாக இருக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கின்றோம்!- அர்ஜூன ரணதுங்க


நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கலாவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று விளையாட்டுத்துறை கடுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிரிக்கட் வீராகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை ஆரோக்கியமானதாகக் கருதப்பட முடியாது.
படையினரைக் கொண்டு இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதியோர் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
எனினும் நாட்டில் பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் இன்னமும் நிலைநாட்டப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட மிகவும் இரகசியமாகவே பேசுகின்றனர்
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது.
குற்றச் செயல்களில்,  ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஒர் தரப்பினரும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்பினரும் இவ்வாறு கட்சியில் இருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் நிதானமாக இம்முறை வாக்களிப்பில் பங்கேற்க வேண்டியது அவசியமானது.
நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சார பதாகைகள் பெனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தங்களது தொழில் போய்விடும் அல்லது திடீர் இடமாற்றம் வழங்கப்படும் என்ற அச்சம் காரணமாக பொலிஸார் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களை அகற்றுவதில்லை என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ad

ad