புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

திமுக பொதுச்செயலாளர் ஆகும் மு.க.ஸ்டாலின்?


 திமுக பொதுச்செயலாளர் ஆகும் மு.க.ஸ்டாலின்?
தி.மு.க.வில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. உட்கட்சி தேர்தல் முடிந்து 5 வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வருடம் மீண்டும் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஒன்றரை மாதம் ஒன்றிய, நகர, பகுதி அளவில் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


அதனைத்தொடர்ந்து கடந்த 19-ந்தேதி முதல் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மொத்தம் 65 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதில் 60 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

எஞ்சியுள்ள 5 மாவட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. ஓரிரு நாட்களில் மாவட்ட செயலாளர்கள் தேர்தல் முடிந்துவிடும்.

இந்த தேர்தல்கள் அனைத்தும் முடிந்த பின்னர் ஜனவரி 9-ந்தேதி மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டு மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தி.மு.க. தலைவராக கருணாநிதி தொடர்ந்து இருந்து வருகிறார். இப்போது கட்சியின் பொதுச்செயலாளராக அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளராக ஆற்காடு வீராசாமி, துணை பொதுச்செயலாளர்களாக துரைமுருகன், வி.பி.துரைசாமி, சற்குணபாண்டியன் ஆகியோர் இருந்து வருகிறார்கள்.

தற்போது மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டும், தீவிரமாக கட்சி பணிகளை மேற்கொண்டும் வருகிறார்.

இந்தநிலையில் பொருளாளராக இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். எனவே அடுத்த சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அவருக்கு கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

அவர் பொதுச்செயலாளராகும் பட்சத்தில், 93 வயதான தற்போதைய பொதுச்செயலாளர் அன்பழகன் கட்சியின் ஆலோசகராக செயல்பாடுவார் என்று கூறப்படுகிறது.

ad

ad