1 ஜன., 2015

ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி குமாரசாமி நியமனம்

சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க தனி பெஞ்ச் அமைக்க வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி, ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க தனி பெஞ்ச்சை அமைத்து , கர்நாடகா ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், நீதிபதி குமாரசாமியை, ஜெயலலிதா வழக்கை விசாரிக்க நியமனம் செய்தும் தலைமை நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.