புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

1 ஜன., 2015

சிவலப்பிட்டி சனசமூக நிலைய அங்கத்தவர் தர்மலிங்கம் இராஜேஸ்வரன் விபத்தில் படுகாயமடைந்து மரணமடைந்துவிட்டார்

புலம்பெயர்ந்து வாழும் சிவலப்பிட்டி சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்!


எமது நிலைய அங்கத்தவரும், அம்பாள் விளையாட்டுக்கழக விளையாட்டு வீரனுமான தர்மலிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள் நேற்று அகாலமரணமடைந்துவிட்டார். அன்னாரின் குடும்பத்தில் குறுகிய காலப்பகுதிக்குள் இவருடன் சேர்ந்து நான்கு உயிர்களை இழந்து நிற்கின்றார்கள் அன்னாரின் குடும்பம். முதலாவது இழப்பு 2007 ஆம் ஆண்டு சகோதரன் ஒருவர் மண்மீட்பு போரிலும், இரண்டாவது இழப்பு 2009 ஆம் ஆண்டு தந்தையார் முள்ளிவாய்க்கால் போரிலும், மூன்றாவது இழப்பு 2011 ஆம்ஆண்டு சகோதரன் ஒருவர் வாகன விபத்திலும், நான்காவது இழப்பு அன்னார். அன்னாரின் குடும்பம் பல கஸ்டங்களுக்கு மத்தியில் இருக்கிறார்கள். புலத்தில் வாழும் சிவலப்பிட்டி சனசமூக நிலைய அங்கத்தவர்களே நலன்விரும்பிகளே அன்னாரின் மரண சடங்கு நிகழ்வுக்கு எம்மால் இயன்ற நிதி பங்களிப்பை வழங்கி அன்னாரின் குடுப்பத்தினருக்கு பக்கத்துணையாக இருப்போம்.
இவ்வண்ணம்.
சிவலப்பிட்டி ச. நிலையம்,
அம்பாள் விளையாட்டுக்கழகம்
பிரான்சு.
பி.கு: பிரான்சில் இருந்து பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள் திரு. த. வாசு அவர்களுடன் தொடர்பு கொள்ளவும். தொ.இ: 0626890922.
ஏனைய நாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள். தலைவர் சிவலப்பிட்டி ச. நிலையம் புங்குடுதீவு தொ.இ: 0094775485834.
வங்கி கணக்கு இல: Sivalaippiddy community centre. A/C: 8170902637, commicial bank, velanai, srilanka.புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்த தர்மலிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள் முள்ளியவளையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதான வைத்தியசாலையில் அதீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்