1 ஜன., 2015

சோனியா மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்


காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வத்ராவுக்கு சொந்தமான ஸ்கைலைட் நிறுவனம் (Skylight Hospitality) நிறுவனத்திடம் நிலம் மற்றும் நிதிபரிவர்த்தனைகள் பற்றி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை விளக்கம் கேட்டுள்ளது. ஸ்கைலைட் நிறுவனம் சட்டவிதிகளுக்கு மாறாக அதிகளவு நிலம் வைத்துள்ளதாக அரியானா மாநிலத்தின் சமீபகால விசாரணையில் தெரிய வந்தது. இதன் எதிரொலியாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்துள்ளனர். வத்ரா அடைந்துள்ள ஆதாயங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். விளக்கங்களையும் இந்த நோட்டீசில் அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஒரே ஒரு பரிமாற்றத்தில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வத்ரா அடைந்துள்ளார். இதுதொடர்பான முழு விவரங்களம் பொதுத் தளத்தில் இருந்து பெற்றுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யவும், தனது நிலையை விளக்க வத்ராவுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்றார்.