புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை


பத்து நாடுகளின் இலங்கைப் பிரஜைகளுக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.பத்து நாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ள
இலங்கையர்கள், இலங்கையில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும்.
வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகள் பின்னரே கடந்த காலங்களில் இலங்கைக் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.
எனினும், எதிர்வரும் காலங்களில் இலகுவான முறையில் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நேர்முகம் காணப்பட்டதன் பின்னர் விண்ணப்பதாரிக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன் உள்ளிட்ட பத்து நாடுகளில் நிரந்தரமாக வதியும் இலங்கையர்களுக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

ad

ad