புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2015

விவாதத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மைத்திரி ஏற்றார்! மஹிந்த பதில் இல்லை!- சட்டத்தரணிகள் சங்கம்

சிறந்த நிர்வாகம்,  ஊழல் ஒழிப்பு மற்றும் ஜனநாயகம் குறித்த விவாதம் ஒன்றுக்கு தம்மால் விடுக்கப்பட்ட அழைப்பை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்;ளது.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதற்கு உரிய பதி;ல் எதனையும் இன்னும் வழங்கவில்லை.
இந்த விவாதத்துக்கான அழைப்பு கடந்த 22ம் திகதியன்று அனுப்பப்பட்டது.
இதன்படி விவாதம் ஜனவரி 5ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .அத்துடன் திகதியை பொறுத்தவரை ஜனவரி 3 அல்லது 5 என்பதை தீர்மானிக்குமாறு இங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கான அழைப்பில் குறிப்பிட்டிருந்தது.
எனினும் இதுவரை ஜனாதிபதியிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இருவரும் ஒரே இடத்தி;ல் விவாதத்தில் ஈடுபடமுடியாது போனால் ஸ்கைப் அல்லது செய்மதி இணைப்புக்களின் மூலம் விவாததத்தில் பங்கேற்க முடியும் என்றும் சங்கம் ஆலோசனை தெரிவித்திருந்தது.

ad

ad