1 ஜன., 2015

திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி! முக்கிய பிரமுகர்களை அனுமதித்ததால் பக்தர்கள் ஆத்திரம்!


வைகுண்ட ஏகாகதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முக்கியப் பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நீதிமப்திகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகளின் வாகனங்களை பக்தர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்ட பிறகே, பொதுதரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

வெகுநேரமாக காத்திருக்க நேரிட்டதால் முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை பக்தர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பக்தர்களை சமாதானப்படுத்தி விடுவித்து அனுப்பினர். இதனிடையே சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் இன்றும், நாளையும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.