புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜன., 2015

விஸ்பரூபம் எடுக்கும் கட்சித் தாவல்கள் இரு தினங்களில் இன்னும் நடக்கும்





வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கட்சி தாவல்கள் இடம்பெற வுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. இன்றும், நாளையும் இக் கட்சித் தாவல்கள் அதிகம்  இடம் பெற லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை அரசாங்கம் மற் றும் எதிரணியில் இருந்து பலர் கட்சி தாவ உள்ளதாக அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளை சேர்ந்தவர்கள் இக் கட்சித் தாவலில் ஈடுபடுவர் என்றும் அவர் கூறினார்.

இலங்கை வரலாற்றில் நடை பெற்ற தேர்தல்களில் நடக்காத விதத்தில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர் கள், பிரதியமைச்சர்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ராட்சி சபைகளின் பிரதிநிதிகள் கட்சி தாவி யுள்ளனர்.

இந்த கட்சி தாவல்களின் முடிவு எங்கே என்பதை நான் அறியவில் லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளுக்கு தாவுவதன் காரணமாக மக்களின் நிலைப் பாடுகளில் மாற்றம் ஏற்படாது எனவும் டியூ. குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் கட்சித் தாவல்கள் களை கட்டியுள்ளன.

இதனால் அரசியல் களநிலைகளை ஆராய்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த வாரம் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத் திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ள தாக கொழும்பு  ஊடகம் ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது.

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்கவை, அமைச்சர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க கடந்த வாரம் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்நிலையில், மூத்த அமைச்சர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்க, அவரது மகனும் நாடாளு மன்ற உறுப்பினருமான விதுர விக்கிரம நாயக்க, அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, அமை ச்சர் ஜீவன் குமாரதுங்க, அவரது மகளும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மால்சா குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே மற்றும் ராஜ பக்ஷ அரசாங்கத்தில் உள்ள மூத்த தலை வர்கள் பலரும் எதிரணியின் பொதுவேட் பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர் வரும் 8ஆம் திகதிக்கு முன்னதாக ஆதரவு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து நேற்று முன்தினம்  வரை 27 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 100க்கும் அதிகமான மாகாண சபை மற்றும் உள்ராட்சி சபைகளின் உறுப்பினர்களும் எதிரணிக்குத் தாவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ad

ad