பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோரின் குற்றங்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில்
அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்களென நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பலியாக்கப்பட்டோர், சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்புத் தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய யாழ். மாவட்ட எம்.பி.யும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமாரின் கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். முருகேசு சந்திரகுமார் தனது உரையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர், யுவதிகள் மிக நீண்டகாலமாக எவ்வித விசாரணைகள், வழக்குகள் இன்றி சிறையில் வாடுவதாகவும் அவர்களுக்கு நீதிமறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதன்போது எழுந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ; பயங்ரவாத தடைச்சட்டத்தின் கீழ் 182 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குற்றங்கள், வழக்குகளின் விபரங்கள் தொடர்பில் ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு இரு வாரங்களுக்குள் அறிக்கையொன்றைத் தரும். அதன் அடிப்படையில் இந்த 182 பேரில் குற்றங்கள் நிரூபிக்கப்படாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றார்.uf