
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பி.திசாநாயக்க,
ஜனக பண்டார தென்னகோன், பீலிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா, ரெஜினோல்ட் குரே மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட 26 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சர்களாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
11 பேர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.