புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?

அலிம்தார் ஏன் இப்படிச் செய்தார்?


இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு தவறான தீர்ப்பு மூலம் வாழ்வளித்து விட்டார் கள நடுவர் அலிம்தார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


பங்களாதேஷûக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் இந்திய அணி 39.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்களுடன் நிதானமாக ஆடிக் கொண்டிருந்த தருணம் அது. ரோகித் ஷர்மா அடித்து ஆட முற்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போதுதான்,  வேகப்பந்து வீச்சாளர் ருபேல் ‘புல்டோஸ்’ ஒன்றை வீசினார். அதை ரோகித் இடதுபுறமாக இழுத்து அடிக்க, அந்த பந்து பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனது.

சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி கேட்ச் கொடுத்து விட்டாரே என்று இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நிலைத்து நின்று ஆடிய வீரர் அவர்தான் என்பதால், ஓட்ட வீதம் வீழ்ச்சியடைந்துவிடுமே என்ற அச்சமும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது.


ஆனால், லெக் நடுவர் அலிம்தார் (பாகிஸ்தான்) ஆபத்பாண்டவராக இந்தியாவுக்கு கை கொடுத்தார். ஆம்...அந்தப் பந்து இடுப்புக்கு மேலே உயரமாக வந்த ‘புல்டோஸ்’. எனவே அது ‘நோ போல்’ என்று கள நடுவருக்கு சமிக்ஞை செய்தார். கள நடுவர் இயன் கவுல்ட் அதை ஏற்று ‘நோபோல்’ என அறிவித்தார்.


நோபோலில் பிடிபட்ட கேட்ச் என்பதால் ரோகித் நொட்  அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரோகித் ஷர்மா சதமெடுத்து அசத்தினார். சதமடித்த பிறகுதான் அதிரடியாக ஆடத் தொடங்கி, சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க விட்டார். மொத்தத்தில் 137 ஓட்டங்களை குவித்த ரோகித் ஷர்மா, தஸ்கின் பந்து வீச்சில் போல்டாகி அவுட்டானார். ஆனால் ரோகித் ஷர்மாவின் ஓட்டக் குவிப்புதான், ஆட்டத்தின் போக்கையே மாற்றியது.


இந்நிலையில், அலிம்தார் மீது லட்சுமணன், வோர்ன் போன்ற பல்வேறு முன்னாள் வீரர்களும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

ரோகித் ஷர்மா 90 ஓட்டங்களுக்குப் பிறகு கூடுதலாக எடுத்த 47 ஓட்டங்களையும் அலிம்தார்தான் எடுத்தார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ad

ad