புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.43 லட்சம் நஷ்டஈடு



சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் மோகன்பாபு. இவருக்கு வித்யா (வயது 23) என்ற மனைவியும், சந்தீபன் (3) என்ற மகனும் உள்ளனர். மோகன்பாபு தனது வேலை காரணமாக வெளியூர் சென்றுவிட்டு கடந்த 19-2-13 அன்று சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். 

இ.சி.ஆர். சாலை கொடப்பட்டினம் அருகே வந்தபோது, அவர் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரம் மற்றும் எச்சரிக்கைப் பலகை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோகன்பாபு உட்பட காரில் பயணித்த 3 பேர் இறந்தனர். 

மோகன்பாபு உயிரிழந்ததைத் தொடர்ந்து, காரின் காப்பீட்டு நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. பொதுக்காப்பீட்டு நிறுவனம் மீது சென்னை வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் மனைவி வித்யா, மகன் சந்தீபன், பெற்றோர் மற்றும் தாத்தா வழக்கு தாக்கல் செய்தனர். 

பின்னர் இந்த வழக்கு சென்னையில் லோக் அதாலத் (மக்கள் மன்றம்) முன்பு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை லோக் அதாலத்தின் நீதிபதிகள் எம்.ஜீவானந்தம், கே.பாலசுப்பிரமணியம், உறுப்பினர்கள் டாக்டர் சரவணன், வக்கீல் கே.லிவிங்ஸ்டன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர்களுக்கு நஷ்டஈடாக ரூ.43 லட்சத்து 50 ஆயிரம் தொகையை 6 வாரங்களுக்குள் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஏ.எஸ். பிலால் ஆஜரானார்.

ad

ad