புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆரஞ்சு நிற புலிக் குட்டிகள்



சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி மரபின கலப்பு முறையில் ஈன்ற 4 ஆரஞ்சு நிற குட்டிகளை பார்வையாளர்கள் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பூங்கா நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆகான்ஷா பெண் வெள்ளைப்புலி (6 வயது), விஜய் (12 வயது) என்ற ஆரஞ்சு நிற ஆண் புலியுடன் இணை சேர்ந்து நான்கு ஆரஞ்சு நிற பெண் புலிக் குட்டிகளை 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி புலிகள் இனப்பெருக்க மையத்தில் ஈன்றது.

இப்போது புலிக்குட்டிகள் தாய்ப்பால் மறந்து, இறைச்சியை உண்ண பழகிவிட்டதாலும், நன்கு வளர்ந்து புதியச் சூழலை தாக்குப்பிடிக்கும் நிலையில் உள்ளதாலும், திறந்தவெளி அடைப்பிடங்களில் இதர புலிகளுடன் சேர்த்து விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை மாலை புலிக்குட்டிகளை பார்வையாளர்கள் கண்டுகளிப்பதற்காக திறந்தவெளி அடைப்பிடத்தில் விடப்பட்டன.

ad

ad