புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

அவன்கார்ட் ஆயுத களஞ்சியம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச விளக்கம்


அவன்கார்ட் கடல் பாதுகாப்பு நிறுவனம் ஊடாக சட்டவிரோத ஆயுத பரிமாற்றங்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், அவன்கார்ட் அமைப்புக்கு இலங்கையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கியவருமான கோத்தபாய ராஜபக்ச, வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கோத்தபாய ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கேள்வி- அந்த நிறுவனத்திற்கு ஏன் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை வழங்க தீர்மானித்தீர்கள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாதல்லவா?.
பதில் - காலியில் நாங்கள் ஆரம்பித்த ஆயுத களஞ்சியம் ஆரம்பித்தில் நாட்டுக்கு உள்ளே இருந்தது. இது ஆரம்பத்தில் இருந்த முறையல்ல. முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட விடயம். சர்வதேசத்தில் இந்த பாதுகாப்பு படையினருக்கு கேள்வி இருந்ததன் காரணமாக பாதுகாப்புச் சபையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானத்தை எடுத்தோம். இதனால், தற்காலிகமாக ஆயுத களஞ்சியத்தை ஏற்படுத்த கடற்படையினர் அதிகாரம் வழங்கினர்.
கேள்வி - அப்படியானால், ஏன் கடற்படையினரின் ஆயுத களஞ்சியம் அப்புறப்படுத்தப்பட்டது?.
பதில் – இதுதான், நாங்கள் இதனை நடாத்தி வந்த போது இது கடற்படையினருக்கு பொருத்தமற்றது என்பதை கண்டோம். கடற்படையின் ஆயுத களஞ்சியத்தில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தும் போது அவற்றின் உரிமை சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படலாம்.
அவை எந்த நாட்டுக்குரியவை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல் பல்வேறு ரக ஆயுதங்களை இந்த நிறுவனம் கொண்டு வர ஆரம்பித்தது. இது எமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், மாத்திரமல்ல.
சரியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஆயுதங்கள் நாட்டுக்குள் வந்து, அவை மீண்டும் வெளியில் கொண்டு செல்லும் போது ஏதேனும் பிரச்சினையில் சிக்கினால், விசாரணை நடத்தும் போது ஆயுதங்கள் இலங்கையில் இருந்து வந்தவை என்பது தெரிந்து விடும்.
சுங்க துறையினர் கண்காணித்த பின்னரே அந்த ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால், மீண்டும் பாதுகாப்புச் சபையில் மீண்டும் கலந்துரரையாடினோம். கலந்துரையாடிய பின்னர் நாங்கள் கடற்படை ஆயுத களஞ்சியத்தை நிறுத்துவது என தீர்மானித்தோம்.
கேள்வி – ஆனால், அவன்கார்ட் சம்பவம் தொடர்பாகவும் முறைகேடான கொடுக்கல் வாங்கல்கள் குறித்தும் தற்போது விசாரணை நடைபெறுகிறது. உங்கள் நிலைப்பாடு என்ன?.
பதில் - கடந்த அரசாங்கத்தில் சகல கொடுக்கல் வாங்கல்களையும் நேர்மையாக செய்தவன் நான் என்பதை எந்த அச்சமும் இன்றி என்னால் கூறமுடியும்.
இதனால், நாங்கள் எந்த களவையும் செய்யவில்லை. அவற்றினால், பணத்தையும் சம்பாதிக்கவில்லை. அரசியல்வாதிகள் பொய்யான ஏதேதோ கூறினாலும் நான் ஒரு சதத்தை கூட சம்பாதிக்கவில்லை.
எனது சொத்துக்களில் இதனை அறிந்து கொள்ள முடியும். ஆனால், தேவையில்லாமல் என்னை விரட்டி வருகின்றனர். கொள்ளையில் ஈடுபட்ட திமிங்கிலங்கள், சுறாக்கள் வெளியில் உள்ளன. அவர்கள் வெளியில் இருக்கும் போது என்னை விரட்டி வருகின்றனர்.
என்னை விரட்டி வரும் நோக்கம் என்ன என்பதை அனைவருக்கும் புரியும். இது திருட்டை பிடிக்கும் வேலையல்ல, சேறுபூசி எனது நல்ல பெயரை கெடுக்கும் முயற்சி. தமது நோக்கங்களை நிறைவேற்றவே இவற்றை செய்கின்றனர்.
கேள்வி – திமிங்கிலங்கள், சுறாக்களை உங்களுக்கு தெரியும் என்று கூறுகிறீர்கள். திடீரென அப்படியான விசாரணைக்கு அரசாங்கம் உங்களிடம் உதவி கோரினால், உதவி வழங்க நீங்கள் தயாரா?.
பதில் – திருடர்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டுமானால், யாரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். திருடர்களை நேர்மையாக பிடிக்க வேண்டுமானால், இதே இங்குதான் திருடர்கள் உள்ளனர் என்பதை நான் காட்டுகிறேன்.
நான் எந்த திருட்டு கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை. எனது அமைச்சின் கீழ் நடைபெற்ற அனைத்து நடவடிக்கைகளும் சட்டத்திற்கு அமைய, சரியான விதத்திலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ad

ad