புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2015

மட்டு கல்வியியல் கல்லூரி பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனம்: தற்கொலைக்கு முயற்சி செய்த மாணவி!


மட்டக்களப்பு தாழங்குடாவில் அமைந்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியில் பெண் பிரதி முதல்வரின் அடாவடித்தனமான செயற்பாட்டினால் ஆசிரிய மாணவி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் தனது தாயார்  சுகவீனமுற்றுள்ள நிலையில் அவரை பார்ப்பதற்காக கல்லூரியின் அனுமதியைபெற்றுச்சென்றுள்ளார். இந்த நிலையில் மீண்டும் மாணவி கல்லூரிக்கு திரும்பிவந்துள்ளார்.அதன்போது அனுமதிபெற்றதற்கு ஒரு நாள் பிந்தியே அவர் கல்லூரிக்கு வந்துள்ளார்.
தனது தாயை பார்க்கச்சென்றவர் ,தாயின் நிலைமை ஓரளவு குணமடைந்ததுமே திரும்பியுள்ளார். இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற மாணவியை உள்நுழையவிடாது தடுத்துள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் உதவி அதிபர் அவரை வீதியில் நிறுத்தியுள்ளதுடன் விடுதிக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை.
குறித்த யுவதி ஒரு நாள் முழுவதும் வீதியிலேயே நின்றுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து அங்கு தெரிந்த ஒருவரின் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் கல்லூரிக்கு வந்தபோது அவரை மீண்டும் அனுமதிக்காத பிரதி முதல்வர் குறித்த யுவதியை கடுமையான வார்த்தைப்பிரயோகங்களால் திட்டியுள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த குறித்த யுவதி நித்திரை மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.இதன்போது குறித்த மாணவியை உடனடியாக ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பிரதி முதல்வரின் செயற்பாடுகளினால் குறித்த மாணவி பெரும் மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தாக மாணவியின் நண்பர்கள் தெரிவித்தனர்.
வட பகுதியை சேர்ந்தவரான குறித்த பிரதி முதல்வர் கல்லூரியில் கடந்த காலத்தில் பல அடாவடித்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது கடமையேற்றுள்ள புதிய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியை சிறந்தமுறையில் செயற்படுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ad

ad