புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

60 ரயில் நிலையங்களில் இலவச Wi-Fi வசதி - நாளை முதல் அறிமுகம்

இலங்கையின் பிரதான 60 ரயில் நிலையங்களில் Wi-Fi ஊடாக இலவச இணைய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 
இதன் முதற்கட்டமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நாளை முதல் இலவச Wi-Fi வசதிகளை ஏற்படுத்தவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஏனைய 60 பிரதான ரயில் நிலையங்களுக்கும் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுகொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரயில்வே திணைக்களம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிலையத்தினுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கு அமைவாக இலவச Wi-Fi சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad