புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

ஊடகவியலாளர்கள் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு கடன் வசதி ; ஊடக அமைச்சு தகவல்

இலங்கையில் பணியாற்றும் ஊடகவியலாளர்களிற்கு கடன்களை வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. 

 
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர  ஊடகவியலாளர்கள், முழு நேர பணியில் ஈடுபடும் ஊடக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. 
 
எனினும் குறித்த கடன்திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஊடகத்துறையில் 3 வருட சேவையைப் பூர்த்தி செய்திருப்பவர்களாக இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.  
 
அதற்கமைய மோட்டார் சைக்கிள், கணனி, புகைப்படக்கருவிகள் கொள்வனவு செய்வதற்கு தலா ஒரு இலட்சம் ரூபாவும் தொலைநகல் கருவி , டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி கொள்வனவு செய்ய தலா 15 ஆயிரம் ரூபாவும் கடனாக வழங்கப்படவுள்ளது. 
 
ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவினால் தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவர். 
 
எனவே விண்ணப்பங்களை ஏப்ரல் 3 ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

ad

ad