புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

பந்துவீச்சில் அசத்தும் அவுஸ்திரேலியா.. விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து திணறல் (வீடியோ இணைப்பு)



அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து
முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 14ல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் காலிறுதியுடன் திரும்பின.
அரையிறுதியில் நியூசிலாந்திடம் தென்ஆப்பிரிக்க அணியும், இந்திய அணி, அவுஸ்திரேலியாவிடமும் தோற்று, தொடரை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் இன்று மெல்போர்னில் நடக்கும் இறுதிப்போட்டியில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.
நியூசிலாந்து அணிக்கு தொடக்க வீரர்களாக அணித்தலைவர் மெக்குல்லம், குப்டில் களமிறங்கினர்.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் அணித்தலைவர் மெக்குல்லம் டக்-அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
பின்னர் குப்டிலுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில் குப்டில் 34 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வில்லியம்சனும் அவுஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். இவர் ஜான்சன் வீசிய வேகத்தில் அவரிடமே பிடி கொடுத்து வெளியேறினார்.
33 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 12 ஓட்டங்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து தற்போது டெய்லர் (17), எலியாட் (12) விளையாடி வருகின்றனர்.
நியூசிலாந்து 19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்களை குவித்துள்ளது.

ad

ad