புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

கருப்பினர் மீது இனவெறி தாக்குதல்: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

பாரிஸ் ரயில் நிலையத்தில் கருப்பினர் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் கடந்த பிப்ரவரி 17ம் திகதி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த விளையாட்டு போட்டியை காண பிரித்தானிய செல்சா கால்பந்து அணி ரசிகர்கள் அங்குள்ள ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்துள்ளனர்.
அப்போது அவர்கள் பயணித்த ரயிலில் ஏற முயன்ற Souleymane Sylla என்ற கருப்பினத்தவரை தடுத்து வெளியே தள்ளியுள்ளனர். ரசிகர்களின் இந்த இனவெறி தாக்குதல் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த இனவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக Richard Barklie(50), Joshua Parsons(20), Dean Callis(32), Jordan Munday(20) மற்றும் William Simpson(26) ஆகிய ஐவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
முன்னதாக, இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட ரசிகர்களை விளையாட்டு போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு செல்லாதவாறு தடை விதிக்க வேண்டும் என பொலிசார் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், பிரித்தானியாவில் உள்ள Waltham Forest Magistrates நீதிமன்றத்திற்கு நேற்று இந்த வழக்கின் இறுதி வாதம் வந்தது.
அப்போது, பேசிய நீதிபதி Mary Connolly, இனவெறி தாக்குதல் நடத்தியதை மன்னிக்க முடியாது என கூறிய அவர், ஐந்து ரசிகர்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்கு தடைவிதிப்பதாக உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்த ரசிகர்கள், நீதிமன்ற தடையை நீக்க மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ad

ad