புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2015

வடமாகாணத்தில் கல்வியை அதிகரிக்க அதிபர்கள் முனைப்புக்காட்ட வேண்டும்; இல்லையேல் அதிரடி நடவடிக்கை



வடக்கு மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும்
என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் ,முஸ்லீம்,  சிங்கள 50 தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடனான சந்திப்பு நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் இந்த எச்சரிப்பினை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,  
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வியை அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.
அதற்கமைய மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த கூட்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்தகால யுத்த சூழ்நிலையில் வடக்கு மாகாணத்திலே கல்வி நடவடிக்கைகளில் வீழ்ச்சி காணப்படுகின்றது. இது கொழும்பு மாவட்டத்தோடு ஒப்பிடும் போது ஒரு போட்டித்தன்மை அற்றதாக உள்ளது.
கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை அதிகரிக்கச் செய்து, கல்வியின் தரத்தை முன்னேற்ற நடவடிக்ககைகளை மேற்கொள்ள அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அவ்வாறு 6மாதகாலத்திற்குள்  மாற்றத்தவறும் அதிபர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமருடனான சந்திப்பின்போது தமது பாடசாலைகளின் தேவைகள் குறித்து தேசிய பாடசாலை அதிபர்கள் பிரதமருக்கு தெரியப்படுத்தியதுடன் தேசிய பாடசாலைகளின் பிரச்சினைகள், குறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்தை சார்ந்த கல்விப்பணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ad

ad