புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

இ ந்திய மீனவர்களை இலங்கை மீனவர்கள் சிறைபிடித்துள்ளதாக தகவல்; இல்லை என்கிறது கடற்படை


இராமநாதபுரம் மாவட்டம்  கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்ற பாம்பன் மீனவர்கள் 7 பேரையும் அவர்களது படகு ஒன்றையும் இலங்கை மீனவர்கள் நடுக்கடலில் பிடித்து வைத்திருப்பதாக  தமிழக ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. 
 
பாம்பனைச் சேர்ந்த மைக்கேல் என்பவருக்குச் சொந்தமான படகில் 7 மீனவர்கள் கோடியக்கரையில் இருந்து கடந்த1ஆம் திகதி மாலை கடலுக்குச் சென்றனர். 
 
கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தியதுடன் பணம் கொடுக்காவிட்டால் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப் போவதாகவும் மிரட்டி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து படகில் உள்ள மீனவர் ஒருவர் படகு உரிமையாளரான மைக்கேலை தொடர்பு கொண்டு தெரிவித்த தகவலின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என மேலும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவர்கள் யாழ். நீரியல் வளத்துறைத் திணைக்களத்திடம்  தொடர்பு கொண்டு கேட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
எனினும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் கடற்றொழில் சங்கங்களும் சம்பவம்  குறித்து தெரியவில்லை என்றும்  தெரிவித்துள்ளன. 
 
இது குறித்து கடற்படைக்கு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் அறிவித்துள்ளதாகவும் திணைக்கள வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன

ad

ad