புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

புதிய தேர்தல் முறைமைகளுக்கேற்ப எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெறும்: ராஜித சேனாரத்தன


புதிய தேர்தல் முறைமைகளுக்கு ஏற்ப எதிர்வரும் பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
அமைச்சரவையில், தேர்தல்கள் ஆணையாளர் புதிய தேர்தல் முறைமைக்கமைய தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளதாகவும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் பாவித்த, அரசாங்கத்துக்கு சொந்தமான 300 வாகனங்கள் இதுவரை அரசாங்கத்துக்கு திருப்பி ஒப்படைக்கப்படவில்லை எனவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர்கள் இரண்டு வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள உத்தியோகபூர்வமான அனுமதியுள்ளது. எனினும் இவர்களில் சிலர் 20க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் கரு ஜயசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்தில் நாட்டை முன்னேற்ற வேண்டுமே ஒழிய கடனில்லல்ல: ராஜித
கடன் வாங்கி நாட்டை அபிவிருத்தி செய்வதில் பிரயோசனம் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டை வருமானத்தினால் மாத்திரமே முன்னேற்ற வேண்டுமே தவிர கடன் வாங்கி அபிவிருத்தி செய்வதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய அரசியல் முறைமை தொடர்பான சட்டவரைபு தற்போது தயாராகி வருகின்றது எனவும், இது தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 100 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்பதைவிட அதனை சரியாக செயற்படுத்தவே அரசாங்கம் முற்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
100 நாள் வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களும் செயற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த கால ஆட்சியின் போது வெளிநாடுகளிலிருந்து பெற்று கொள்ளப்பட்ட நிதி மீள செலுத்தப்படாத காரணத்தினால் தற்போது அதிகளவான நிதி செலுத்த வேண்டியுள்ளதாகவும்,
கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளே இதற்கு பிரதான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ad

ad