புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

கட்சி பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் ராஜினாமா!


  ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் பதவியின் வேலைப்பளு காரணத்தினாலும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த முறை டெல்லி  முதல்வராக பதவியேற்ற 45 ஆவது  நாளில் முதல்வர் பதவியை  ராஜினாமா செய்த  கெஜ்ரிவால், இந்த முறை முதல்வராக பதவியேற்ற சுமார் 20 நாட்களுக்குள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


தனது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த கெஜ்ரிவால், ஒரே நேரத்தில் இரண்டு பொறுப்புகளைக்  கவனிக்க முடியவில்லை. நான் டெல்லி மக்களுக்கு சேவை செய்வதையே விரும்புகிறேன். எனவேதான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

புதிய ஒருங்கிணைப்பாளர் யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுவரை யாரும் தேர்வு செய்யப்படவில்லை. விரைவில் அறிவிப்போம் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் பிரசாந்த் பூஷண், கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் ஆகியோர், கட்சியில் கெஜ்ரிவால் முன்னிலைப்படுத்துவது குறித்து அதிருப்தி அடைந்தனர். கட்சியின் பாராளுமன்ற விவகார குழுவிடம் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் பதவி விலகல்  கடிதம் அளித்தனர் என்றும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

ad

ad