புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

சப்பாத்துக்களை துடைப்பதற்கும் மேலும் பல இதரவேலைகளையும் செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் காணாமல் போனவர்கள் இரகசிய முகாம்களில்; வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு


வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர் இலங்கையின் பல இடங்களில் உள்ள இரகசிய
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என எமக்கு தகவல்கள்  கிடைத்துள்ளதாக வடக்கு முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
 
காணாமல் போனவர்களின்  உறவுகள்  யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்ததுடன் அரச அதிபர் , வடக்கு ஆளுநர் மற்றும்  முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மகஜர் கையளித்தனர்.
 
அவர்களிடம் உரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
கடந்த கால போரில் வடக்கு கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல் போன பலர் திருகோணமலை, அம்பாந்தோட்டை, மஹரகம போன்ற நாட்டிலுள்ள பல இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . 
 
இவர்கள் அங்கு சப்பாத்துக்களை துடைப்பதற்கும் மேலும் பல இதரவேலைகளையும் செய்வதற்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்ற இரகசிய தகவல் எமக்கு கிடைத்துள்ளது. 
 
இது தொடர்பில் புதிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட வகையில் ஜனாதிபதிக்கும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளதுடன்  விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளோம்.
 
அத்துடன் சிறைகளிலும்  புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களையும் எதிர்வரும் வெசாக் தினத்தில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதியிடம் கோரியுள்ளோம். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் இருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ad

ad