புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

துடித்துக் கொண்டிருந்த இதயம் நின்றது... மைதானத்தில் சுருண்டு விழுந்த வீரர்!


இங்கிலீஸ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இதயம் செயலிழந்தது காரணமாக வீரர் ஒருவர் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரச சிகிச்சைக்குப் பின் அவர் உயிர் பிழைத்தார்.

கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று இதயம் செயலிழந்து போவதால் (கார்டிக் அரெஸ்ட்) மைதானத்தில் சுருண்டு விழுவது வாடிக்கையாகி வருகிறது. இதயச் செயலிழப்பு காரணமாக பாதிக்கப்படும் இந்த வீரர்கள், சில நேரங்களில் உயிரிழப்பதும் உண்டு.


இங்கிலீஸ் பிரீமியர் லீக் போட்டியில் நேற்று ஸ்வான்சீ மற்றும் டாட்டன்ஹாம் அணிகள் மோதிய ஆட்டம் லண்டன் வொயிட்ஹார்ட் லேன் மைதானத்தில் நடந்தது.

இந்தப் போட்டியின் போது ஸ்வான்சீ அணியை சேர்ந்த பிரான்ஸ் முன்கள வீரர் பெப்டிம்பி கோமிஸ், இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவருக்கு மைதானத்தில் வைத்தே மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முதல் கட்டமாக ஒட்சிசன் செலுத்தப்பட்டு பின்னர் சி.ஆர்.பி. எனப்படும் அவசர கால முதல் உதவி சிகிச்சையும் கோமிசுக்கு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து லண்டனில் உள்ள மருத்துவமனையில் கோமிஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை முன்னேற்றமடைந்திருப்பதாகவும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ad

ad