புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2015

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு பொதுத்தேர்தலில் இடமளிக்க வேண்டாம் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்


ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட வர்களுக்கு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வேட்புமனு வழங்க வேண்டாமென
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதி க்கும், பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே துறைமுக, கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் பணத்தை வீண்விரயம் செய்தது மாத்திர மன்றி, புக்கிகாரர்களும், வெள்ளைவேன் காரர்களும், சூது, எதனோல் காரர்களும் இருந்தார்கள் என்றும் இவர்களுக்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட கூடாதென்று தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வேறு வழியில் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் இருக்கும் இவர்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சியிலோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ வாய்ப்பு வழங்க வேண்டாமென ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலொன்றுக்கு முகம் கொடுக்க உள்ள இச்சந்தர்ப்பத்தில், கடந்த 10 வருட காலமாக ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியின் மூலம் இந்நாட்டை இருளடையச் செய்த யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இனம், மதம், கட்சி பேதமின்றி மாற்றமொன்றுக்காக அணிதிரண்டு இந்நாட்டில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளுடன் கூடிய ராஜபக்ஷ ஆட்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மாற்றத்துக்காக ஒன்றுதிரண்ட அனைவரினதும் முயற்சியை தோற்கடிக்க திரைமறைவில் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. இதற்காக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு இந்த முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்.
வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு உட்பட சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு நாட்டில் ஆட்சிமாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளன. அரசியல் கட்சி என்ற ரீதியில் பல்வேறு கொள்கைகளுடன் செயற்பட்டாலும் ஜனாதிபதியும், பிரதமரும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும் ஒரே மேசையில் அமர்ந்து பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அவ்வாறே, அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரே மேசையில் அமர்ந்து நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். குறிப்பாக கடந்த அரசாங்கத்தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு பொதுமக்கள் பணத்தை துஷ்பிரயோகம் செய்த மோசடிக்காரர்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்கக்கூடாது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வாய்ப்பு கிடைக்காதோருக்கு ஐக்கிய தேசியக்கட்சியிலும், ஐக்கிய தேசியகட்சியில் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க வேண்டாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அப்பாவி மக்களை உசுப்பேற்றி தேசிய வளங்களை சூறையாடி இந்நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற மோசடி, ஊழல்கார அரசியல்வாதி களுக்கு தேர்தலில் தோல்வியடையச் செய்வதற்கு நல்ல சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. ஜனவரி 8ஆம் திகதி பெற்றுக் கொண்ட வெற்றியை பாதுகாப்பதற்காக கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டா மென்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

ad

ad