27 மார்., 2015

யாழ். இந்துவுக்கு கல்வி அமைச்சர் விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ஆர்.இராதாகிருஷ்ணன் யாழ்.இந்துக் கல்லூரிக்கு பயணம் மேற்கொண்டு எதிர்கால அபிவிருத்தி குறித்து கேட்டறிந்து கொண்டார்.
 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அமைச்சரைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து விளக்கினார். 
 
 
யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைச்சரை வரவேற்றனர். அத்துடன் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைகள் குறித்தும் அதிபர் அமைச்சருக்கு விளக்கியிருந்தார்.