புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2015

சிறையிலுள்ள பெண்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை ; என்கிறார் ரணில்

சிறையிலுள்ள பெண்கள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகள்  தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பு ஒன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 
 
அதன்போது சிறையில் உள்ள பெண்களை விடுதலை செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்தலைமைத்துவக் குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை  வேண்டும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரியிருந்தார்.
 
அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நாடாளாவிய ரீதியில்  சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண்கள் குறித்து மகளிர் விவகார பிரதி  அமைச்சர் விஜயகலா அனுப்பி வைத்துள்ள அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது. 
 
அதற்கமைய நடவடிக்கைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிறையில் உள்ள பெண்கள் குறித்து வழக்குத்  தொடரப்பட்டு விடுதலை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும். 
 
அத்துடன்  பெண் தலைமைத்துவ குடும்பங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கும் அவர்களுக்கு சுயதொழில் முயற்சிகளை வழங்க எமது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad