புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2015

யாழ்.மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்றுவோம்; பிரதமர் ரணில்

யாழ். மாவட்டத்தை பொருளாதார வலயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.       
 
யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம்  மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் மக்கள்  சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார். 
 
 
அதன்போது தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வடக்கில் உள்ள இளைஞர் , யுவதிகள்  வேலைவாய்ப்பு இன்றியும்  வாழ்வாதாரத்தில் பின்னடைவுடனும் உள்ளனர். 
 
எனவே வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கவும்  , வேலையில் இருந்து இடையில் விலகியவர்கள் மற்றும் வேலையை இழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று கோரிக்கை விடுத்தார். 
 
அதற்குப்பதிலளிக்கும்  போதே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  
 
வேலையில்லாப்பிரச்சினை வடக்கு மாகாண மட்டுமல்ல இலங்கை பூராகவும் உள்ளது. நாம் குறுகிய கால திட்டான 100 நாள் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம். அதனுடாக நாட்டில் ஒற்றுமை , சட்ட ஆதிக்கத்திற்கு உட்படுத்தி பொதுத் தேர்தலின்  பின்னர் 10 இலட்சம்  பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டு வருகின்றது.
 
அதற்கமைய யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை , கண்டி ஆகிய மாவட்டங்களை பொருளாதார வலயமாக முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்ததும்  அதற்கான செயற்பாடுகள்  நடைபெறும். 
 
மேலும்  விவசாயத்திற்கு வடக்கு மாகாணம் சிறந்த இடமாக உள்ளது. எனவே எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அதற்காக சிறந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி  விவசாயத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம் . அதற்கான நிதியினைப் பெற்றுத்தரவும் நாம் நடவடிக்கை எடுப்போம். 
 
21 ஆம்  நூற்றாண்டுக்கு ஏற்ற மாற்றம்  வடக்கில் இடம்பெற்றால் முழுநாடும் மாற்றமடையும் என அவர் மேலும் தெரிவித்தார். 

ad

ad