புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

மூன்று மாதங்களில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு


தென்மராட்சி பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் டெங்கினால் பீடிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியுள்ளது.

 
கடந்த ஜனவரி மாதத்தில் 52 பேரும், பெப்ரவரி மாதத்தில் 32 பேரும், மார்ச் மாதத்தில் 29 பேரும் டெங்கினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
 
மார்ச் மாதம் 15ஆம் திகதி வரை டெங்கினால் பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த போதிலும் அதன் பின்னர் பெய்த மழையினால் திடீரென அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
 
டெங்கு ஏற்பட்டுள்ளதென உறுதிப்படுத்தப்பட்டதும் அந்த இடத்திலும் அதனை அண்டிய  குடியிருப்புப் பகுதிகளிலும் சாவகச்சேரி சுகாதாரப் பகுதியினர் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற் கொண்டு மேலும் பரவாமல் தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ad

ad