புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

ஐ.தே.கவின் அம்பாறை கூட்டத்தில் அமளிதுமளி- கூட்டத்தில் பதுங்கினார் ரணில்


அம்பாறையில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் பீ. தயாரத்னவுக்கு எதிராக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஹூ சத்தமிட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பீ. தயாரத்ன மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்டதுடன் 7 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே மேடைக்கு வருமாறு அழைத்த போது தயாரத்ன மேடையில் ஏறி உரையாற்றினார். அப்போது இரண்டு முறை அவருக்கு எதிராக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹூவென சத்தமிட்டனர்.
எனினும் தொடர்ந்தும் பேசிய தயாரத்ன, அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அவர் ஆற்றிய சேவையை விளக்கினார். அவர் அக்கூட்டத்தில் தெரிவிக்கையில், கூட்டத்தில் இருக்கும் ஓரிருவருக்கு நான் செய்த சேவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம்.
இந்த எதிர்ப்புக்கொல்லாம் நான் அஞ்ச போவதில்லை எனக் கூறினார். அப்போதும் கூட்டத்தில் இருந்தவர்கள் ஹூவென சத்தமிட்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன் எதனையும் கூறாமல், எதுவும் தெரியாதவர்கள் போல் காணப்பட்டர்.
எனினும் தனது உரையின் போது தயாரத்னவின் பெயரை கூறவும் தனக்கு பயம் என குறிப்பிட்டார்.

ad

ad