புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

தமது அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரல் எழுப்பும் தமிழ் கூட்டமைப்புஆனாலும் அரசுடனேயே அவர்கள் - சந்திரிகா

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் சுமுகமான, மிகவும் நல்லதொரு உறவு நிலவுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக் குரலெ ழுப்புவார்கள்.
எனினும் எங்கள் மத்தியில் சிறந்த உறவு ஒன்று காணப் படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப் படாவிட்டால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்திற் கான ஜனாதிபதி செயலணியை தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிரந்தர அலுவலக மாக மாற்றவுள்ளோம். கடந்த அரசாங்கம் இந்தி யாவுடனான உறவுகளை முற்றாக சீர்குலைத்துள் ளதை தொடர்ந்து அதனை சரி செய்து, இந்தியாவுட னான நல்லுறவை மீள கட்டியெழுப்புவதற்கு இலங்கை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குள் இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். அவரது விஜயத்தின் மூலம் நட்புறவு பற்றிய வலுவான செய்தியொன்றை அவர் இலங்கைக்கு வழங்கியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மோசமான ஆட்சிக்காகவே மக்கள் அவரை தோற்கடித்தார்கள். மஹிந்த ஆட்சியில், அவரது குடும்பத்தின் ஊழல்கள், மனித உரிமை மீறல், பல கொலைகள் மற்றும் ஒட்டுமொத்தத்தில் சுதந்திரம் இல்லாத நிலையே இலங்கையில் காணப்பட்டது.
ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாங்கள் அனுபவிக்கின்ற சுதந்திர உணர்வு மிகப்பெரியது என அவரது ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்களே தெரிவிக்கின் றார்கள். விமுக்தி குமாரதுங்க அரசியலுக்குள் நுழைவாரா என்று எனக்கு தெரியாது. அவர் குறித்து நான் கருத்துத் தெரிவிக்க முடியாது. ஆனால் நான் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை அரசியலுக்குள் நுழையமாட்டேன், நான் மீண்டும் அரசியலுக்கு வருவது அசிங்கமான விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad