புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

14 சங்கங்கள் போராட்டம்: அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின



தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 12–வது ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள், பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

இறுதி கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்கள் ஆதரித்து கையெழுத்திட்டன.

தி.மு.க.வின் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., தே.மு.தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்கவில்லை. பெரும்பாலான உறுப்பினர்களை கொண்ட தொழிற்சங்கங்களை புறக்கணித்து விட்டு ஆளில்லா சங்கங்களை வைத்து போடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தொ.மு.ச. அறிவித்து இருந்தது. அதன்படி இன்று தொ.மு.ச., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.

14 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. ஆனாலும் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 28 சங்க தொழிலாளர்களை கொண்டு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு பஸ்கள் இன்று வழக்கம் போல் ஓடின.

சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வந்தன. தமிழ் புத்தாண்டு என்பதால் வடபழனி, மாங்காடு, திருவேற்காடு, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு கூடுதலாக பஸ்கள் விடப்பட்டன.

விடுமுறை நாட்களில் வழக்கமாக இயக்கப்படும் 3058 மாநகர பஸ்களை விட இன்று 3117 பஸ்கள் சென்றன. கூடுதலாக 59 பஸ்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போல கோவை, சேலம், கும்பகோணம், விழுப்புரம், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்து கழகங்களிலும் முழு அளவில் பஸ்கள் இயக்கப்பட்டன.

ad

ad