புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

இராணுவ சூழல் இல்லாதொழிந்து புது வசந்தம் மலரட்டும்


இன்று மலரும் புத்தாண்டில் எம்மை சுதந்திரம் அற்ற மனிதக் கூட்டமாக செயற்படவைத்து எம்மைச் சுற்றி இராணுவச் சூழலைத் தொடர்ந்து
வைத்திருப்பதை இனியாவது நீக்கவேண்டும் என பிரார்த்திப்போம். இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
 
யாழ்.இந்தியத் தூதரகமும், வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடத்திய "மலரட்டும் புதுவசந்தம்' என்னும் புத்தாண்டு இசை நிகழ்வு நேற்று நெல்லியடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
""புத்தாண்டை வரவேற்கும் 
இராணுவச் சூழல்
இந்த இசைநடன நிகழ்வு மலரட்டும் புதுவசந்தம் எனப்பெயரிடப்பட்டுள்ளது. வடக்கின் வசந்தம் என்ற பெயரின் கீழ் மத்திய அரசு மாகாணத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அரசியல் செயற்பாட்டை கடந்த வருடம் நடத்தி வந்தது. 
 
அப்போது வசந்தம் என்னும் சொல் ஆக்கிரமிப்பை காட்டும் ஒரு சொல்லாக இருந்ததால் அப்படியான வசந்தம் போய்விட்டது. ஆனால் இந்திய தூதரகமும், மாகாண கல்வி அமைச்சும் இந்த நிகழ்வை ஆக்கித்தந்துள்ளமை சாலப் பொருந்துவதாக அமைந்துள்ளது.
 
புதிய வசந்தம் ஒன்று மலர வேண்டுமானால் தேவையற்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு  எம்மீது திணிக்கப்பட்டிருக்கும் அடிமைத்தனங்கள் நீக்கப்படவேண்டும்.'' என்று அவர் குறிப்பிட்டார்.
 
"இயற்கையோடு இணைந்த வாழ்க்கையே எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் போது எமது பாரம்பரியத்தை நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது.
 
நடனங்கள் வேறுமனே கை, கால்களை ஆட்டும் ஒரு நிகழ்வாக அல்லாது அவற்றை பற்றிய உள்ளாற்றலையும் ,உயர்ந்த கருத்துக்களையும் எடுத்தியம்பி எம்மை அவை சம்பந்தமாக அறிவுடையவர்களாக ஆக்குவது இந்த நடன முறைகள் பல காலத்திற்கு அழியாது இருக்க உதவி புரியும். 
 
இப்படி பட்ட கலைகள் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் எமது இநதிய இணைத்தூதரகம் கரிசணை காட்டி வருகின்றது. எமக்கு கலாச்சார மண்டபம் ஒன்றை அமைப்பதற்கும் இவர்கள் உதவி புரிந்து வருகிறார்கள்.''‡ என்றும் அவர் தெரிவித்தார்.
"இனி வரும் காலங்களில் கலைகளின் வெளிப்பாடு நவீன கலாச்சார மண்டபத்தில்  யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.  
 
பிறக்கப்போகும் புதுவருட வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிக்கின்றேன்.'' என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ad

ad