புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

நீதிபதியை காட்டுக்குள் விடமறுக்கும் ஆந்திர காவல்துறை


தமிழகத்தை சேர்ந்த 20 கூலி தொழிலாளிகளை சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை. தமிழகத்தில் கடும்
எதிர்ப்புகள் கிளம்பியது. இதிலிருந்து தப்பிய சேகர், பாலச்சந்தர் என்ற இரண்டு பேரை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் மக்கள் கண்காணிப்பகம் என்ற மனித உரிமை அமைப்பு ஒப்படைத்தது.
தேசிய மனித உரிமை ஆணையம் மக்கள் கண்காணிப்பகத்துக்கு, உண்மை அறியும் குழு ஒன்றை அமைக்க அனுமதி தந்தது. அதன்படி மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ், என்.எச்.ஆர்.சியின் முன்னாள் உறுப்பினர் சந்திரபால், ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராம்மோகன், ஐவஹிருல்லா எம்.எல்.ஏ, வழக்கறிஞர் அஜிதா கொண்ட ஒரு டீம் அமைக்கப்பட்டது.
அந்த டீம் இன்று 14ந் தேதி ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழக எல்லையில் உள்ள நகரி காவல்நிலையத்தில் விசாரணையை தொடங்கினர். அங்கிருந்து திருப்பதி சென்றனர். துப்பாக்கி சூடு நடந்ததாக சொல்லப்படும் இடத்துக்கு செல்ல இக்குழுவுக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது.
முன்னாள் நீதிபதி சுரேஷ், சித்தூர் மாவட்ட எஸ்.பி, திருப்பதி எஸ்.பிக்களின் பர்சனல் மற்றும் அலுவலக எண் வரை தொடர்பு கொண்டபோது யாரும்போன் எடுக்கவில்லை. மீட்டிங்கில் உள்ளோம் என எஸ்.எம்.எஸ் மட்டும் அனுப்பியுள்ளனர்.
மற்றொரு குழு 20 உடல்களை பிரேத பரிசோதனை செய்த திருப்பதி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல்கள் கேட்டபோது, ரிப்போர்ட் இன்னும் தயார் செய்யவில்லை என்றவர்கள் சில தகவல்களை மட்டும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். இதனால் குழு அதிருப்தி அடைந்துள்ளது.
செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி காந்தாராவ்வை சந்திக்க முயற்சி செய்துள்ளது இக்குழு. அவரும் சந்திக்க மறுக்கும் பட்சத்தில் நாளை பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை சந்தித்துவிட்டு தங்களது அறிக்கையை என்.எச்.ஆர்.சிக்கு தர முடிவு செய்துள்ளது குழு.

ad

ad