புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஏப்., 2015

முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை விரைவில் திறப்பு


இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை எதிர்வரும் 17ம் திகதி பின்னவலயில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.
பின்னவலை யானைகள் சரணாலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பகுதியில் இத்திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிறுத்தைகள், கரடிகள்- மான்கள்- முதலைகள் உட்பட பல விலங்குகளை கண்டு ரசிக்க முடியும்.
இத்திறந்தவெளி மிருகக்காட்சிச்சாலை நிர்மாணத்திற்கு 862 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், 488 மில்லியன் ரூபா திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad