புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் வளலாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை

போர் காரணமாக 20 வருடகாலமாக இயங்காது இருந்த வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன்  பாடசாலை இன்றைய தினம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால்
மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
 
பாடசாலை ஆரம்பமான இன்றைய தினம் 21 மாணவர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
 
1882 ம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. போர் காரணமாக 1990 ம் ஆண்டு வளலாய் மக்கள் இடம்பெயர்ந்ததை அடுத்து இப்பாடசாலை ஆவரங்கால் மகாஜன பாடசாலையுடன் இணைத்து கல்வி செயற்பாட்டை முன்னெடுத்தது.
 
அதன் பின்னர் 1995 ம் ஆண்டு இடம்பெயர்வினை அடுத்து பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டது. 1996 ம் ஆண்டு மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட போது பாடசாலை முற்றாக சேதமடைந்து காணப்பட்டது.
 
போர் முடிவடைந்ததை அடுத்து 2010 ஆண்டு முதல் இப்பாடசாலையை மீள ஆரம்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பாடசாலை பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
அதன் பிரகாரம் இன்றைய தினம் அப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது.
 
பாடசாலை கட்டடம் முற்றாக சேதமடைந்து காணப்படுவதனால் தற்போது பாடசாலை வளலாய் முற்போக்கு மண்டபத்திலேயே இயங்க ஆரம்பித்து உள்ளது.
 
தற்போது தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள் நடைபெறவுள்ளன 
 
பாடசாலையை சொந்த இடத்தில் மீள கட்டி முடிப்பதற்கு 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன் பணிகள் முடிவடையும் வரை பாடசாலை வளலாய் முற்போக்கு மண்டபத்திலேயே  தொடர்ந்து இயங்கவுள்ளது.
 
20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் வளலாய் அமெரிக்கன் மிஷன் பாடசாலை
news
போர் காரணமாக 20 வருடகாலமாக இயங்காது இருந்த வளலாய் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன்  பாடசாலை இன்றைய தினம் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவினால் மீள ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
 
ad

ad