புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

காமினி செனரத், மனைவி, பிள்ளைகள், 4 கம்பனிகள்;: வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்கு நீதிமன்று அனுமதி


ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத், அவரது மனைவி, பிள்ளைகள் உட்பட 09 பேரினதும் மற்றும் 04 கம்பனிக ளதும் வங்கி கணக்குகளை பரீட்சிப்பதற்கு கொழும்பு பிரதம மஜிஸ்ரேட் ஜிஹான் பிளப்பிட்டிய நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
காமினி செனரத் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்களின் பெயரிலும் நான்கு கம்பனிகளது பெயர்களிலும் வைப்புச் செய்துள்ள வங்கி கணக்குகள், சொத்துக்கள், பாதுகாப்பு பெட்டகம் என்பன தொடர்பாக
உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து தகவல்களும் அடங்கிய அறிக்கையை இரகசிய பொலி ஸாருக்கு சமர்பிக்குமாறு இந்நாட்டின் 81 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பொது முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி பிரதான மஜிஸ்ட்ரேட் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
காமினி செனரத் சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் பெருந்தொகையான நிதி மற்றும் சொத்துக்களை சேர்த்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை செய்வதற்கு இத்தகவல்கள் அவசியமானது என்றும் அதனால் இந்நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் செனரத்தின் பெயரிலோ அல்லது அவரது நெருங்கிய உறவினர் அல்லது கம்பனிகளின் பெயரிலோ நடாத்தப்படுகின்ற நிதி, கொடுக்கல் - வாங்கல் குறித்து அறிக்கைகள் தேவையென்றும் குறிப்பிட்டு குற்றப்புனாய்வு திணைக்களம் சமர்ப்பித்த கோரிக்கையை பரிசீலனை செய்த பின்னரே பிரதம மஜிஸ்ட்ரேட் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
செனரத்துக்கு சொந்தமான 04 கம் பனிகளும் அவரது மனைவி. பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட 09 பேரின் பெயர்களையும் தேசிய அடையாள சட்டை இலக்கங்களையும் சமர்பித்தே குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இந்த அனுமதியை கோரினர்.
காமினி செனரத் அல்லது அவர் சிபாரிசு செய்தவரின் பேரில் வைப்பிலிடப்பட்டுள்ள சேமிப்புக்கள், நிலையான வைப்புக்கள், கடன் கணக்குகள், கடனட்டை, முற்கொடுப்பனவு அட்டை, கடன் சுமை, கடனை செலுத்தும் காலஎல்லை, பாதுகாப்பு பெட்டகம் என்பன தொடர்பாக 2015 ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான மாதாந்த கணக்கு சுருக்கம் என்பவற்றை அத்தாட்சிப்படுத்தி வழங்குமாறும் அறிவுத்தல் வழங்கி யுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொது மக்கள் புகார் பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் 2006, 05 ஆம் இலக்க பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
காமினி செனரத் சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் திரட்டிய பணத்தை, 11 வாகனங்களைப் பயன்படுத்தி கொண்டு சென்றதாகவும் இரகசிய பொலிஸாருக்கு புகார் கிடைத்துள்ளது. அவ்வாறு பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்ற வாகனங்களின் இலக்கங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் சபையின் தலைவருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, இரகசிய பொலிஸாருக்கு வழங்கிய புகாரின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
2013 செப்டம்பர் 25 ஆம் திகதி மற்றும் 2013 டிசம்பர் 19 ஆம் திகதி ஆகிய காலப்பகுதிக்கிடையில் இவர் இந்த பணத்தை திரட்டியிருப்பது தெரிவாகி யுள்ளது.

ad

ad