புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

சுவிஸ் நொசத்தல் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்


மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால்வரை வீரகாவியம் படைத்து மாவீரர்களான நடுகல் நாயகர்களுக்கும், தியாக தீபம் அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவுகள் சுமந்த நினைவெழுச்சி நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நொசத்தல் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில், பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட வேளையில் கலை பண்பாட்டுக்கழக இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்கள் இசைக்கப்பட்டது.
மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக, எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், சிறுவர்களின் இன உணர்வு மிக்க பேச்சுக்கள், கவிதாஞ்சலி நிகழ்வுடன் காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரைகளும் இடம்பெற்றன.
முதற்தடவையாக நொசத்தல் மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமையானது மீள் எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்ததாக சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நினைவெழுச்சி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.

ad

ad