புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

விழுப்புரத்தில் பயங்கரம் : பழிக்கு பழியாக ரவுடி தலையை துண்டித்து ஊர்வலம் (



2004–ம் ஆண்டு விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ஆர்.கே.சிவா கொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையில் ரவுடி பத்தர் செல்வன், அவர்களது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தனர். அவர்களை பழிவாங்க ஆர்.கே.சிவாவின் தம்பி அறிவழகன் (வயது 30) திட்டமிட்டார்.

இன்று அதிகாலை அறிவழகன் கூட்டாளிகளுடன் ரவி, பிரகாஷ் ஆகியோரை தேடி சென்றார். அவர்களை கண்டதும் ரவி ஓடி விட்டார். பிரகாஷ் மட்டும் அவர்களிடம் சிக்கினார். அவரை அறிவழகன் வெட்டினார். இதில் பிரகாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார்.  அவர் இறந்து விட்டதாக நினைத்து அறிவழகன் அங்கிருந்து நகராட்சி பூங்காவிற்கு வந்தார். அங்கு பத்தர்செல்வன் நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக்கொண்டு இருந்தார். அங்கு வந்த அறிவழகன் பாய்ந்து வந்து பத்தர்செல்வனை சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே அவர் பிணமானார்.

பின்னர் பத்தர்செல்வத்தின் தலையை துண்டித்து எடுத்தார். தலையை இடது கையிலும், வீச்சு அறிவாளை வலது கையிலும் வைத்துக்கொண்டு விழுப்புரம்–புதுவை ரோட்டில் நடந்து வந்தார். அந்த இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அறிவழகன் கையில் தலையை வைத்துக்கொண்டு வருவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினார்கள். டீ குடித்துக்கொண்டு இருந்த முன்னாள் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்தார்.

பின்னர் அறிவழகன் 300 மீட்டர் தூரம் நடந்து சென்று மெயின் ரோட்டில் உள்ள காந்தி சிலை பீடத்தின் கீழே தலையை வைத்தார். சிறிது நேரத்தில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தார்கள்.

அறிவழகன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–  எனது அண்ணனை கொன்ற அனைவரையும் பழி வாங்குவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன். அண்ணனை கொன்றதில் மூளையாக செயல்பட்டவர் பத்தர்செல்வன். அவர் என்னையும் கொல்வதற்கு சந்தர்ப்பம் பார்த்து இருந்தார். இதனால் சில நாட்களாக ஊரில் இல்லாமல் புதுவையில் பதுங்கி இருந்தேன். இனியும் பத்தர்செல்வனை விட்டு வைக்கக்கூடாது என்று கருதிய நான் இன்று கொலை திட்டத்தை அரங்கேற்றினேன். பத்தர்செல்வன் விழுப்புரத்தில் விஷப்பூச்சி போல் செயல்பட்டு வந்தார். இதனால் அவரை அழித்து இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அறிவழகனுடன் மேலும் பலரும் கொலையில் சம்பந்தப்பட்டு உள்ளனர். அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ad

ad