புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஏப்., 2015

நடிகைகள் ராதிகா, நளினி மீது வழக்கு!



: தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் மீது வழக்கு பதிய உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


பிற மொழி தொடர்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதால், தமிழ் தொடர் தயாரிப்பு பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 15 ஆம் தேதி சென்னையில் சின்னத் திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் நளினி, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன் ஆகியோர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின்போது, மொழி மாற்று தொடர்களை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேரில் சென்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக விருதுநகர் வழக்கறிஞர் கார்மேகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''மொழி மாற்று சின்னத்திரை தொடர்களுக்கு எதிராக சென்னையில் ஏப்.15 ஆம் தேதி போராட்டம் நடத்திய சின்னத் திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா, சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவர் நளினி, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன் ஆகியோர், மொழி மாற்று தொடர்களை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு நேரில் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிற மொழி தொடர்களை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதால், தமிழ் தொடர் தயாரிப்பு பாதிக்கப் பட்டு வருவதாக வேதனையடைந்து தமிழ் சின்னத் திரை இயக்குநர் பாலாஜி தற்கொலை செய்துகொண்ட தாகக் கூறி ராதிகா உள்ளிட்டவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தமிழக கூலி தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்படும் இந்த நேரத்தை பயன்படுத்தி பிற மொழி தொடர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியவர்கள் ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள். தமிழ்நாடு அரசு கேபிள் கழகம் இப்போராட்டத்தை ஊக்குவிக்கிறது.

நடிகைகள் ராதிகா, நளினி, இயக்குநர் விக்கிரமன் ஆகியோர் மீது வழக்கு பதியவும், மொழி மாற்று தொடர் களை ஒளிபரப்பும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கின் விசாரணையை இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் வரும் 24ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad