புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

மாற்றப்பட்ட 20 கூட திருப்தியாக இல்லை கூட்டமைப்பு தெரிவிப்பு


அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் மாற்றிய மைக்கப்பட்ட வடிவமும் திருப்தியளிப்பதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

"நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இலக்கத்தில் கூட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. நாம் கேட்டுக் கொண்டது போல், வடக்கு - கிழக்கில் 15 வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது. 
அத்துடன், சிறுபான்மையினரின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அதைக் குறைக்கக்கூடாது. 
இது தொடர்பில் அரசு உத்தர வாதம் வழங்காவிடின், 20ஆவது திருத்தச் சட்டத்தை தற்போதுள்ள வடிவிலும்கூட ஆதரிப்பது கஷ்டமானது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்ட வட்டமாகத் தெரிவித்துள்ளது.
  
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட யோசனையை கூட்டமைப்பு அடியோடு நிராகரித்திருந்தது. இதன் பின்னர் திருத்தப்பட்ட 20ஆவது திருத்தச் சட்ட முன்மொழிவு ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அமைச்சரவைக்கு நேற்றுச் சமர்பிக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரனிடம் 'உதயன்டு' பத்திரிகை தொடர்பு கொண்டு கேட்டது. 
அவர் தெரிவித்ததாவது:
சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவம் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழி வழங்கப்படாமல், தற்போதுள்ள வடிவத்திலும் 20ஆவது திருத்தத்தை ஆதரிப்பது கஷ்டமான விடயம்.
ஆரம்பத்திலிருந்தே அரசிடம், தேர்தல் முறைமை மாற்றம் செய்யப்படும் பொழுது தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யக் கூடாதென்று கோரியிருந்தோம். அந்த எண்ணிக்கையில் குறைப்புச் செய்வதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 
போரின் காரணமாக வடக்கு - கிழக்கில் மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டுள்ளனர். பலர் புலம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் விகிதாசார பிரதிநிதித்துவத்திலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 9இலிருந்து 7 ஆகக் குறைந்துள்ளது. 
தொகுதிவாரியாக பிரிக்கப்படும்பொழுது தமிழ் மக்களின் பிரதிநித்துவம் மேலும் குறைவடையக்கூடும். 15 வருடங்களுக்கு வடக்கு - கிழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்பதைத்தான் அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம்.
இந்தத் திருத்தங்களால் மலைய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படப்போகின்றது. அதற்கு என்ன ஏற்பாடு செய்யப் போகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இலக்கத்தில் மாற்றுவதால் மட்டும் பயன் ஏதுமில்லை. இலக்கத்தைக்கூட்டி, சிங்களப் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளமுடியாது. 
சிறுபான்மை மக்களின் பிரதிநித்துவம் பாதிக்கப்படாது என்று அரசு வெளிப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்தை தற்போதுள்ள வடிவிலும் ஆதரிப்பது கஷ்டமானது என்றார் சுரேஷ். 

ad

ad