புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

பாடசாலை மாணவர்களது சேவையில் ஈடுபடும் வாகனங்கள் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றக்கூடாது.

பாடசாலை மாணவர்களது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுகின்ற வாகனங்களது இயந்திரம் உட்பட அனைத்து விடயங்களும் ஒழுங்கான முறையில் காணப்படவேண்டும் என யாழ் மாவட்ட போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் பொ.மதிவண்ணண் தெரிவித்துள்ளார்.
 
யாழில் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களை பரிசோதனை செய்யும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது. குறித்த நடவடிக்கை தொடர்பாக ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
 
இங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள். அவர்களை பூவைப்போல பாதுகாக்க வேண்டும். இந் நிலையில் அவர்களை பாடசாலைக்கு அழைத்து செல்கின்ற வாகன சாரதிகள் அளவுக்கு அதிகமாக மாணவர்களை வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இனிவருங்காலங்களில் அவ்வாறு அளவுக்கு அதிகமாந மாணவர்களை  ஏற்றக்கூடாது.
 
அத்துடன் வாகனங்களில் முன் கண்ணாடிகளில் தேவையற்ற பூ மாலைகளோ வேறு எதேனும் தேவையற்ற பொருள்களையும் வைத்திருக்ககூடாது. எனேனில் அவ்வாறு வைத்திருப்பதனால் வாகன ஓட்டுனருக்கு வீதி தெளிவாக தெரியாது எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்புள்ளது எனவே இவற்றை சாரதிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அல்லாத பட்சத்தில் அவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் வாகனங்களது இயந்திரபகுதிகள்  அனைத்தும் சரியான முறையில் காணப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் வாகன சாரதிகளுக்கு எதிராகவும் உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இவற்றை நாமும் போக்குவரத்து பொலிஸாரும் தொடர்ந்தும் அவதானிப்போம். என மாவட்ட போக்குவரத்து திணைக்கள பரிசோதகர் தெரிவித்தார்.

ad

ad