புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

புனர்வாழ்வளிக்கப்பட்ட 5754 புலிகளுக்கு நிவாரணக் கடன் வழங்க அமைச்சரவை அனுமதி


 விடுதலைப்புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்த நிலையில்  சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான
சுயதொழில் நிவாரணக் கடன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்தாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்தநிலையில், னித நேய நடவடிக்கைகளின் இறுதியில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டதன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான சுயதொழில் நிவாரணக் கடன் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக 2012 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் 2014.12.31 திகதி வரை 302 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மேலும் கடனைப் பெறுவதற்கான நோக்கில் 5,754 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே மேற்படி நிவாரணக் கடன் திட்டத்தின் நடைமுறைகளில் அவசியமான மாற்றங்களுடன் இலங்கை வங்கிஇ மக்கள் வங்கிஇ லங்காபுத்ர வங்கி மற்றும் இலங்கை சேமிப்பு வங்கியின் மூலம் மேலும் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதற்காக மீள் குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி. எம். சுவாமிநாதன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ad

ad