புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூன், 2015

வெள்ளைக்கொடி விடயத்தை சரத்திற்கு கூறிய பிரசன்னவுக்கு கோத்தா கொலை அச்சுறுத்தல் – சுவிஸில் தஞ்சம்,

prasanan

வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய
ராஜபக்ச உத்தரவிட்டிருந்த விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறிய
ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு மிக நெருக்கமானவரும், வன்னி இறுதி யுத்தத்தின் போது ரூபவாஹினி தொலைக்காட்சிக்காக நேரடியாக சென்று தகவல்களை சேகரித்தவருமான ஊடகவியலாளர் பிரசன்ன என்பவருக்கு கோதபாய ராசபக்ச கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
வன்னி இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தின் வெற்றிகளை இவரே அரச தொலைக்காட்சியான ரூபவாஹினியில் வெளிப்படுத்தி வந்தார்.
ரூபாவாஹினி செய்தியாளரான பிரசன்ன என்பவர் கோதபாய ராசபக்சவுடன் அவரின் அலுவலகத்தில் இருந்த போதே வன்னியிலிருந்த இராணுவ கட்டளை தளபதிக்கு வெள்ளைக்கொடியுடன் வரும் விடுதலைப்புலி தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டார் என தெரியவருகிறது.
சரத் பொன்சேகாவிற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன என்ற ஊடகவியலாளர் பின்னர் இவ்விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு கூறியிருந்தார். இந்த விடயத்தையே சண்டே லீடர் ஆசிரியரிடம் பேசும் போது தான் தனிப்பட்ட ரீதியில் கூறியதாக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் ஊடகவியலாளர் பிரசன்ன ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ச பிரசன்னாவுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் நாட்டை விட்டு தப்பி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் நேபாளத்திற்கு வந்த பிரசன்னவுக்கு சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராசபக்ச மற்றும் மகிந்த ராசபக்ச குடும்பத்தினரில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இவர் அமெரிக்க மற்றும் சுவிஸ் அதிகாரிகளுக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் நிபுணர்குழுவுக்கும் இந்த நாடுகள் ஊடாக சில ஆவணங்கள் உட்பட அறிக்கை ஒன்றையும் வழங்கியிருந்தார்.
சுவிட்சர்லாந்தில் அதிகாரிகளிடம் பிரசன்ன அளித்த வாக்கு மூலத்திலும் வெள்ளைக்கொடி விவகாரத்தை தான் சரத் பொன்சேகாவிற்கு கூறியதன் காரணத்திற்காகவே கோதபாய ராசபக்ச தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்திருக்கிறார்.


தற்போது பிரசன்ன என்ற இந்த ஊடகவியலாளர் சுவிட்சர்லாந்து செங்காளன் மாநிலத்தில் வசித்து வருகிறார். இவரிடம் வன்னியில் இறுதிக்கட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களும் உள்ளதாக தெரியவருகிறது.  

ad

ad