புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2015

290 புதிய பேருந்துகள்-55 சிற்றுந்துகள்: ஜெயலலிதா துவக்கி வைத்தார்




தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 290 புதிய பேருந்துகள் மற்றும் 55 சிற்றுந்துகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் கோட்டம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் - உப்பிலியாபுரத்தில் 99 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனை மற்றும் துறையூரில் 94 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன பகுதி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிபாளையத்தில் 1 கோடியே 82 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டடம் மற்றும் ஓட்டுநர் தேர்வுத்தளம்; திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரத்தில் 81 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன பகுதி அலுவலகக் கட்டடம்; கரூர் மாவட்டம் - மண்மங்கலம், மதுரை மாவட்டம் - உசிலம்பட்டி, திருவள்ளூர் மாவட்டம் - திருத்தணி, திருவண்ணாமலை மாவட்டம் - செய்யாறு ஆகிய இடங்களில் 1 கோடியே 28 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் செலவில் மோட்டார் வாகன பகுதி அலுவலகங்கள்;

அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 46 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளம்; கோயம்புத்தூர் மாவட்டம் - கோபாலபுரத்தில் 10 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்து சோதனைச் சாவடி கட்டடம்; கடலூர் மாவட்டம் - சிதம்பரம், தூத்துக்குடி மாவட்டம் - திருச்செந்தூர் ஆகிய இடங்களில் 91 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்;

திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி, திண்டுக்கல் மாவட்டம் - திண்டுக்கல், சிவகங்கை மாவட்டம் - காரைக்குடி மற்றும் திருப்புவனம், திருவண்ணாமலை மாவட்டம் - சேத்துப்பட்டு, சேலம் மாவட்டம் - ஓமலூர், கோயம்புத்தூர் மாவட்டம் - ஒண்டிப்புதூர் (கூடுதல் பணிமனை), புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவையாறு, கரூர் மாவட்டம் - குளித்தலை, தேனி மாவட்டம் - குமுளி (லோயர் கேம்ப்), மதுரை மாவட்டம் - செக்கானூரணி ஆகிய இடங்களில் 12 கோடியே 17 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 பணிமனைகள்; என மொத்தம் 19 கோடியே 53 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துத் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்  கோட்டம் சார்பில் 52 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - சேலம் கோட்டம் சார்பில் 41 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர் கோட்டம் சார்பில் 29  பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்  கோட்டம் சார்பில் 47 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - மதுரை கோட்டம் சார்பில்  104 பேருந்துகள்; தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி கோட்டம் சார்பில் 17 பேருந்துகள்; என மொத்தம் 58 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 290 புதிய பேருந்துகள்;   

மேலும் மக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்  கோட்டம் சார்பில் 7 சிற்றுந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கோயம்புத்தூர்  கோட்டம் சார்பில் 44 சிற்றுந்துகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்  கோட்டம் சார்பில் 4 சிற்றுந்துகள், என மொத்தம் 9 கோடியே 15 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 55 சிற்றுந்துகள் ஆகியவற்றை கொடியசைத்து துவக்கி வைத்து, 5 பேருந்து ஓட்டுநர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கினார்கள்.

முதலமைச்சர் இன்று போக்குவரத்துத் துறையின் சார்பில் துவக்கி வைத்த பேருந்துகள் மற்றும் திறந்து வைத்த திட்டங்களின் மொத்த மதிப்பு 87 கோடியே 24 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர் டி.பி. பூனாட்சி, தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் த. பிரபாகர ராவ், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, போக்குவரத்துத் துறை ஆணையர் சத்யபிரத சாகு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad