புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூன், 2015

நெய்மருக்கு சிவப்பு அட்டை: அடிதடியில் முடிந்த பிரேசில் - கொலம்பியா ஆட்டம் (வீடியோ)




கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில், கொலம்பிய அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோல்வியடைந்தது.
28 முறை நடந்துள்ள இந்த இரு அணிகளுக்கிடையேயான மோதலில், கொலம்பிய அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்..
சான்டியாகோ நகரில் நடந்த இந்த 'சி' பிரிவு ஆட்டத்தில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. இதனால் பவுல் ஆட்டமே அதிகமாக இருந்தது. 36வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் முரிலோ முதல் கோல் அடித்தார். பிரேசில் அணியின் பெனால்டி ஏரியாவுக்குள் சுற்றிக் கொண்டிருந்த பந்து முரிலோவுக்கு கிடைத்தது. பெனால்டி ஏரியாவுக்குள் இருந்த குழப்பத்தை பயன்படுத்தி, பந்தை முரிலோ கோலுக்குள் அடித்தார்.
பிரேசில் அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தன. நெய்மர் மற்றும் ஃபிர்மினோவால் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியவில்லை. இதில் ஃபிர்மினோவுக்கு ஒரு முறை ஓபன் நெட் வாய்ப்பு கிடைத்தும், அதையும் கோல் கம்பத்துக்கு மேல் அடித்து பிரேசில் ரசிகர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கொண்டார். இறுதியில் கொலம்பிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் வெனிசூலா, பிரேசில், கொலம்பியா ஆகிய 3 அணிகளுமே தலா 3 புள்ளிகளை ஈட்டியுள்ளன. கடந்த உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தை போலவே இந்த போட்டியிலும் பவுலுக்கு பஞ்சமில்லை.90 நிமிட நேரத்தில் மொத்தம் 39 முறை இரு அணி வீரர்களும் பவுல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதி விசில் ஊதப்பட்டதும் மைதானத்தில் இரு அணி வீரர்களும் கைகலப்பில் ஈடுபட கோதாவில் இறங்கினார்.

              
அந்த சமயத்தில் நடுவர் ஓசிஸ் பிரேசில் அணியின் நெய்மருக்கும் கொலம்பிய அணியின் மாற்று ஆட்டக்காரர் கார்லெஸ் பாக்காவுக்கும் சிவப்பு அட்டை காட்டினார். இதனால் அடுத்த ஆட்டத்தில் இந்த இருவரும் விளையாட முடியாது. அடுத்த ஆட்டத்தில் வரும் 22ஆம் தேதி பிரேசில் அணி வெனிசூலா அணியையும் கொலம்பிய அணி பெரு அணியையும் எதிர்கொள்கின்றன.
கால்பந்து வரலாற்றில் பிரேசில் - கொலம்பிய அணிகள் 28 முறை மோதியுள்ளன. இதில் கொலம்பிய அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும். இதற்கு முன் கடந்த 1991ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் கொலம்பியா அணி 2&0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியுள்ளது. அதற்கு பின் இப்போதுதான் பிரேசிலை கொலம்பியா தோற்கடித்துள்ளது. அதோடு உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் கண்ட தோல்விக்கும் கொலம்பியா பழிதீர்த்துள்ளது.

ad

ad